அடைகாத்தல்

அடைக்காப்பானில் பொரிக்கவைக்கப்படும் குஞ்சுகள் 6 வார வயது வரை அடைகாக்கப்படுகிறது. தட்பவெப்பநிலையைப் பொறுத்து இக்காலம் மாற்றி அமைக்கப்படலாம். வெப்பநிலை மிதமானதாக இருந்தால் ஓரிரு வாரங்கள் ஆன குஞ்சுகளை சிறிது வெளியே உலவ அனுமதிக்கலாம். பறவையை அடைகாக்கும் இடத்திற்கு எடுத்து வருமுன் மஞ்சள் கரு அல்லது தொப்புள் கொடியை ஏதேனும் நோய் தாக்கியுள்ளதா என்பதை சோதித்து அறிந்து கொள்ளவேண்டும். அயோடின் பயன்படுத்துவது சிறந்தது.

செயற்கை அடைகாப்பு முறையில் குஞ்சுகளுக்கு கீழ்க்கண்ட தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும்.

  • வெப்பம்
  • நீர்
  • உணவு / தீவனம்
  • காற்றோட்டம்
  • ஒளி
  • கூளம்

வெப்பம்

சரியான அளவு இடத்தில் சரியான வெப்பநிலையில் குஞ்சுகள் அடைகாக்கப்படவேண்டும். குஞ்சுகளின் வெப்பநிலை ஏற்றுக் கொள்ளும் திறனே இதை அறிய சிறந்த வழிகாட்டி. அதிக மற்றும் குறைந்தளவு வெப்பநிலையை அளவிட ஒரு வெப்பநிலைமானி பொருத்தப்படவேண்டும். இவ்வெப்பநிலைமானி அடைகாக்கும் வீட்டின் வெப்பநிலை மாற்றங்களை குறிப்பாக இரவில் ஏற்படும் மிகக்குறைந்த வெப்பநிலையை அளவிட உதவுகிறது. குஞ்சுகள் வளரும் போது வெப்பநிலையைச் குறைத்து விடலாம். கீழ்க்கண்ட வெப்பநிலை அட்டவணை குஞ்சுகளுக்கு அளிக்கவேண்டிய வெப்பத்தை அதன் வயதிற்கு ஏற்றாற் போல காட்டுகிறது.

emu_chicks brooding
செயற்கை அடைகாப்பு முறை

வயது (நாட்களில்) வெப்பநிலை குஞ்சுகளுக்கு டிகிரி செல்சியஸில்
1-7 30+
7-14 28
14-21 26
21-28 24

நீர்

பிறந்த குஞ்சுகளுக்கு தண்ணீர்த் தொட்டியைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும். இவ்வாறு தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் சில குஞ்சுகள் தாகத்தால் இறந்து விடும். எனவே குஞ்சுகள் எளிதில் கண்டுணரக் கூடிய வகையில் நல்ல பளிச்சென்ற நிறங்களில் நிறைய தண்ணீர்ப் பாத்திரங்கள் வைத்து அதில் எப்போதும் சுத்தமான குளிர்ந்த நீர் நிரப்பி இருக்குமாறு பாாத்துக் கொள்ள வேண்டும்.

தீவனம்

முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு குஞ்சுகளுக்கு சிறிது சிறிதாக தீவனம் அளிக்கவேண்டும். அப்போது தான் அவைகள் தீவனங்களை அலகினால் கொத்தி உண்ணப்பழகும். இளம் பறவைகளுக்கு 18 சதவிகிதம் புரதம் நிறைந்த புதிய நல்ல தரமான தீவனமளித்தல் வேண்டும். இது நன்கு அரைக்கப்பட்டு, துகளாக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இதோடு சிறிது சிறிதாக நறுக்கப்பட்ட லுயூசர்ன், கிக்குயா போன்ற பசும் புற்களை கொட்டிலில் தூவிவிடவேண்டும். ஈமுக்கள் புற்களின் பச்சை நிறத்தால் ஈர்க்கப்படுவதால் நன்கு கொத்தி உண்ணும்.

காற்றோட்டம்

ஈமு குஞ்சுகள் நன்கு ஆரோக்கியத்துடன் வளர அவற்றின் நல்ல காற்றோட்டம் அவசியம். குஞ்சுகள் எளிதில் குளிர்ந்து விடுவதால் எக்காரணம் கொண்டும் வறட்சியைத் தாங்கிக் கொள்ளாது. சூடான காற்று வீசும் போது 300-450 செ.மீ உயரம் கொண்ட அடைப்புப் பலகை ஒன்றைத் தயார் செய்து வைக்கலாம். குஞ்சு வளர வளர இப்பலகையின் தூரத்தை அதிகப்படுத்தி உள்ளே நல்ல காற்றும் இடவசதியும் இருக்குமாறு செய்தல் வேண்டும்.

ஒளி

இப்பறவைக்கேற்ற ஒளி அளிக்கும் முறை இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் ஒரு முறையான ஒளி வழங்கப்படின் குஞ்சுகளின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகின்றது.  இது இரவிலும் கூட குஞ்சுகள் கொட்டிலுக்குள் உலாவி நீர் மற்றும் தீவனத்தை எடுத்துக் கொள்ளப் பயன்படுகிறது. 40 வாட்ஸ்  விளக்கு அல்லது அதற்கு ஈடான் 50 லக்ஸ் ஒளித்திறன் கொண்ட ஒளியை 23 மணி நேரம் கொடுப்பது நல்ல வளர்ச்சியைத் தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் குஞ்சுகளுக்கு சிறிது இருட்டும் தேவைப்படும். இது பறவைகள் ஒன்றோடொன்று முட்டிக் கொண்டு இருப்பதால் மூச்சுத் திணறலைத் தவிர்க்க உதவுகிறது.

கூளங்கள்

கூளங்கள் பயன்படுத்துவது பற்றி பலவகைக் கருத்துக்கள் நிலவுகின்றன. எனினும் ஈமு கோழியில் பயன்படுத்தும் கூளமானது குஞ்சுகளின் (அனைத்துத் ) தேவைகளையும் பூர்த்தி செய்யுமாறு இருக்கவேண்டும். அதற்கேற்றவாறு கூளம் சுத்தமானதாகவும், இராசயனங்களற்ற, மென்மையான, உறிஞ்சக்கூடிய துகள்கள் / தூசுகளற்றதாக இருக்குமாறு பயன்படுத்தவேண்டும். பைன் மரத்துண்டுகளின் செதில்கள், மணல், மரத்துகள் போன்ற பொருட்களை கூளங்களாகப் பயன்படுத்தலாம்.

This entry was posted in இனப்பெருக்கம். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*