அடைகாப்பு முறைகள்

இரண்டு விதமான அடைகாக்கும் முறைகள் உள்ளன.
குறிப்பிட்ட பகுதியில் சூடுபடுத்தும் வகை
பல அடைகாப்பான்கள் இவ்வகையைச் சார்ந்தவை. இதில் அகச்சிவப்பு விளக்குகள், வாயு சூடாக்கிகள் அல்லது மின்சார சூடாக்கிகள் சூடேற்றப் பயன்படுகின்றன.

அகச்சிவப்பு அடைப்பான்கள்

இவை எளிமையானவை. முதலீடும் குறைவு அதோடு குறைந்த அளவு கவனமே போதும். 100 வாட்ஸ் கொண்ட இரு பல்புகள் குறைந்த எண்ணிக்கையிலான குஞ்சுகளுக்குப் போதுமானது. இவ்விளக்குகளை கூளத்திற்கு மேல் 450-600 மிமீ உயரத்தில் பொருத்தவேண்டும். ஒரு விளக்கு அணைந்து விட வாய்ப்புண்டு. எனவே எப்போதும் இரண்டு விளக்குகள் பயன்படுத்தப்படவேண்டும். ஒவ்வொரு உருண்டைக்குள்ளும் ஒளி மற்றும் வெப்பம் கடத்தக்கூடிய எதிரொளிப்பான் இருப்பது அவசியம். எனினும் இம்முறை குளிர்ப் பிரதேசங்களில் வளர்க்கும் ஈமுக்களுக்கு சரியான பலனைத் தருவதில்லை.

இவ்வகை அடைகாக்கும் பகுதியில் சரியான பலனைத் தருவதில்லை. உயரத்தில் காற்றோட்டத்திற்காக ஒரு திடப்பகுதியில் சூழப்பட்டு இருக்கும். அடைகாப்பான் மூடியுடன் கூடியதாக இருத்தல் வேண்டும். அப்போது தான் உள்ளே வெப்பநிலை சரியாக பராமரிக்க முடியும். குளிர்க் காலங்களில் சற்று அதிக வெப்பநிலை அளிக்கப்படவேண்டும். அவ்வப்போது மூடியைத் திறந்து புதிய காற்று உள்ளே உலவச் செய்ய வேண்டும். இல்லையெனில் ஆஸ்பெர்ஜில்லோசிஸ் காளான் நோய் பரவவிடலாம்.

வாயு அடைப்பான்கள் மற்றும் மின்சார சூடாக்கிகள்

பெயருக்கேற்றார் போல் இம்முறையில் மின்சாரம் மூலமாகவோ, அகச்சிவப்புக் கதிர்கள் மூலமோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெப்பமூட்டப்படுகிறது. இவை உருவத்திலும் சூடேற்றும் திறனிலும் வேறுபடுகின்றன. அகச்சிவப்பு முறை போன்று தான் இம்முறையும் பின்பற்றப்படுகிறது. எனினும் அகச்சிவப்பு விளக்கு முறையை விட சிறந்தது.

முழு இடமுறை

இம்முறையில் அடைகாப்பான் முழுவதும் சீராக வெப்பப்படுத்தப்படுகிறது. இவ்வாறு வெப்பப்படுத்த வாயுக்களையே மின்சாரம், எண்ணெய் அல்லது கெரசின் போன்ற பொருட்களையோ பயன்படுத்தலாம். இவை அடைகாப்புக் கொட்டகையில் நிலையாகப் பொருத்தப்படுகிறது. ஒரு குறப்பிட்ட வெப்பநிலை எல்லா இடங்களிலும் சீராகப் பரவி இருக்கவேண்டும். பொதுவாக அதிக எண்ணிக்கையில் குஞ்சுகள் பொரிக்க இம்முறை பயன்படுத்தப்படுகிறது. கொட்டகை முழுவதும் நல்ல காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

This entry was posted in இனப்பெருக்கம். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*