ஈமுக்களைப் பிடிக்கும் முறைகள்

பெரிய ஈமுக்களைப் பிடிக்கும் பொது அவற்றின் பின்னால் அல்லது பக்கங்களிலிருந்தே பிடிக்கவேண்டும். ஏனெனில் இப்பறவைகள் முன்பக்கம் நோக்கியே உதைக்கக் கூடியவை. மேலும் பிடிக்கும் போது இறக்கைகளை சேர்த்து நெருக்கமாக இறுக்கிப் பிடித்துக் கொள்ளுதல் வேண்டும். ஈமுவின் பின்னங்கால்களில் கூர்மையான அமைப்புகள் இருப்பதால் அவை காயமேற்படுத்தி விடாமல் கையாள்பவர் கவனமாக இருக்கவேண்டும். பிடித்திருக்கும்போது ஈமுக்கள் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளப் போராடும் போது காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

emu catching
பின் பக்கமாக வந்து பிடித்தல்
வேறொரு முறையில் ஈமு பறவையின் பின்பக்கமாக வந்து ஒரு கையை பறவையின் பின்பகுதியில் அழுத்திக் கொண்டு மற்றொரு கையால் அதன் நெஞ்சுத் துட்டில் உள்ள மென்மையான தோலை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும்.  அதன் பின்பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தத்தினால் ஈமுவால் நகரமுடியாமல் அடங்கிவிடும்.

முதலில் பிடிக்கும் போது ஈமு அதிகமாகத் துள்ளும். ஒரு நபர் அதைப் பிடித்தவுடன் மற்றொரு நபர் உடனே அதை வாங்கி கூண்டில் / அறையில் அடைத்து விடவேண்டும். பிடிபட்ட ஓரிரு நிமிடங்களில் ஈமு அடங்கிவிடவேண்டும். அது துள்ள ஆரம்பித்தால் பின்பு அதைப் பிடித்துக் கொண்டு இருப்பது கடினம்.

பிடித்தபின் பிடி தளர்ந்தாலோ, விலகிவிட்டாலோ, உடனே பறவையைக் கீழே விட்டு விட்டு ஓடிவிடவேண்டும்.
பிடிபட்ட பிறகு தொடர்ந்து பறவையானது அடங்காமல் துள்ளிக்கொண்டே இருந்தால், அதன் மேல்கழுத்தையும், பின் தலையையும் பிடித்து மேலும் கீழும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசையில் இழுக்கவேண்டும். இது பறவையை ஓரளவு பலத்தைக் குறைத்து அது முன்னோக்கி உதைப்பதைக் குறைக்கும்.

கைக்கடிகாரம்  போன்ற பொருட்களை கழற்நி விடுதல் நலம். ஈமு பறவைகளை முறையாகக் கையாண்டால் நல்ல முறையில் வளர்க்கலாம்.

This entry was posted in கையாலும் முறைகள். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*