ஊட்டச்சத்துக்களின் தேவை

ஈமு கோழியின் வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உற்பத்தி அதிகரிக்க முறையான ஊட்டச்சத்து பராமரிப்பு அவசியம். மற்ற பறவைகளைப் போன்றே ஊட்டச்சத்துக்கள் ஈமுவுக்கும் தேவைப்பட்டாலும் சில அத்திாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றன.

ஆற்றல்

கார்போஹைட்ரேட மற்றும் கொழுப்புச் சத்து அதிகம் கொண்ட சோயாபீன் தூள், பயறு வகைத் தானியங்களை அளித்தல்வேண்டும்.

புரதம்

உணவில் உள்ள புரதமானது குடல் பகுதிகளில் உடைக்கப்பட்டு அமினோஅமிலமாக மாற்றப்படுகிறது. இந்த அமினோ அமிலம் உட்கிரகிக்கப்பட்டு தசையாக மாற்றப்படுகிறது. எனவே ஈமு வளர்ச்சியில் அமினோ அமிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. மொத்தமுள்ள 20 அமினோ அமிலங்களில் 9 மட்டுமே ஈமுவால்  உற்பத்தி செய்து கொள்ள முடியும். எனவே மீதம் 11 அமினோ அமிலங்கள் கண்டிப்பாக தீவனம் மூலமாக அளிக்கப்படவேண்டும். மேலும் மெத்தியோனைன், லைசின், தியோனைன், டிரைப்டோபன் போன்றவையும் சிறிதளவ கிடைக்கச் செய்யவேண்டும்.

விட்டமின்கள்

இவை புரதம், கார்போஹைட்ரேட் போன்று முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இல்லை எனினும் பறவைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியம். சில விட்டமின்கள் தன் மலம்  உண்ணுதல் மூலமும் வேறு சில சிறுகுடல் நுண்ணுயிரிகளாலும் கிடைத்தாலும் சில விட்டமின்கள் உணவின் மூலம்  அளிக்கப்படவேண்டும்.

தாதுக்கள்

இவை சாதாரணமாக உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை, கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, சோடியம் மற்றும் குளோரைடு மற்றும் நுண் தாதுக்களான பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், செலினியம் போன்றவையும் உணவின் மூலம் வழங்கப்படவேண்டும்.

நார்ப்பொருள்

ஈமுக்கள் தங்களது உடலில் 20 சதவிகிதம் மட்டுமே நார்ச்சத்தைக் கொண்டுள்ளது. இது அதன் ஆற்றல் தேவையில் 11 சதம் மட்டுமே வழங்க முடியம். நார்ப்பொருட்களை அதிகம் செரிக்க முடியாமையே இதற்குக் காரணம். காட்டில் வளரும் ஈமுக்கள் பெரிய பூச்சிகள், சிறு முதுகெலும்பிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்ட தாவரப் பாகங்களான பூக்கள், வளரும் இளம் தளிர்கள், பழங்கள் மற்றும் விதைகளை உண்ணும். வேகமாக வளரும் இளம் ஈமுக்களுக்கு குறைந்த நார்சத்துள்ள தீனியை அளித்தல் வேண்டும். சில நார்ப்பொருட்கள் குடலின் செயலைத் தூண்டிவிட்டாலும் நார்ச்சத்துக்களின் தேவை ஈமுக்களில் குறைவே.

This entry was posted in நீர் மற்றும் தீவன மேலாண்மை. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*