சிகிச்சைகள்

எதிர்ப்பொருள் சிகிச்சை அளிக்கலாம். நைட்ரோ ஃபியூரான் மருந்துகள் அளிக்கப்படலாம். எனினும் அவை சிறிது நேரத்திற்கே ஆறுதல் தரும். சோதனைச் சாவடியிலிருந்து மாதிரிகளின் முடிவை வாங்கி கால்நடை மருத்துவர் உதவியுடன் தகுந்த மருந்தை அளிப்பதே சிறந்தது.

நோய் அதிகம் பரவும் வாய்ப்புள்ள இடங்களான தொற்று நீக்கி கொண்டு சுத்தப்படுத்துதல் வேண்டும்.

  • ஃபார்மால்டிஹைடு வாயுக்கொண்டு தினசரி சேகரிக்கும் முட்டைகளை புகையூட்டம் செய்யவேண்டும்.
  • கரைசல் கெர்ணடு கழுவுவதை விட புகையூட்டம் செய்வதே சிறந்தது. ஏனெனில் 43-49 டிகிரி  செ வெப்பநிலையில் ஒரு தொற்று நீக்கக் கரைசல் கொண்டு கழுவும் போது ஓடுகள் ஈரமாக்கப்படும். பின்பு உடனே சூடான காற்று கொண்டு முட்டையை உலர்த்த வேண்டும். முட்டை ஓட்டின் உட்சவ்வுகள் சுருங்குவதற்கு வாய்ப்புள்ளது.
  • கைகள் மூலமாகவும் பாக்டீரியாக்கள் எளிதில் பரவக்கூடும். எனவே முட்டைகளைக் கையாளும் போது கையுறை அணிந்து கொள்வது சிறந்தது.
  • பொரிப்பகத்தையும் விரிக்கான் எஸ் வாயு ஃபாாமால்டிஹைடு அல்லது ஆர்த்தோசான் குளூட்டரால்டிஹைடு போன்ற தொற்று நீக்கிகள் கொண்டு ஒவ்வொரு குழு குஞ்சு பொரிப்பு முடிந்தவுடன் பொரிக்காத முட்டைகளையும், ஓடுகளையும் அகற்றிவிட்டு சுத்தம் செய்தல் அவசியம்.
  • குஞ்சுகள் இறக்க ஆரம்பித்த உடனே சோதனைச் சாலைக்கு அனுப்பி நோயினை தெரிந்து கொண்டு அதற்கேற்ப மருந்து கொடுத்தல் அவசியம்.
  • எதிர்ப்புப் பொருள் அளிக்கும் சிகிச்சையைக் குஞ்சுகளுக்கு நோய்பரவுவதற்கு முன்பே செய்தல் நலம்.
This entry was posted in நோய் மேலாண்மை. Bookmark the permalink.

One Response to சிகிச்சைகள்

  1. mohan says:

    good inpermation thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*