செயற்கை முறையில் அடைகாத்தல்

செயற்கை முறையில் ஒரு நாளின் காலை, மாலை இரண்டு முறை முட்டையை சேகரித்து அடைகாப்பானில் வைக்கப்படுகிறது. சேகரித்த முட்டைகளை தொற்று நீக்கிக் கொண்டு சுத்தம் செய்து குளிர்ந்த அறை வெப்பநிலையில் அதாவது 10-16 டிகிரி செ 10 நாட்கள் வரை வைக்கவேண்டும். ஒவ்வொரு குழு முட்டைகளாக குறிப்பிட்ட இடைவெளியில் (10 நாட்கள் இடைவெளி) அடைகாத்தல் வேண்டும்.

ஈமு கோழியின் முட்டைகளுக்கென தனி அடைகாப்பான்கள் உள்ளன. மேலும் கோழியின் அடைகாப்பானையே சிறிது பெரியதாக மாற்றியும் ஈமு முட்டைகளைப் பயன்படுத்தலாம். குளிர் வெப்பநிலையிலிருந்து எடுத்து அறை வெப்பநிலைக்கு எடுத்து வந்து 12-18 மணி நேரம் வைத்துப் பின்பு தான் அடைகாப்பானுக்கு மாற்றுதல் வேண்டும். அடைகாப்பானில் 35.25-35.5 டிகிரி செ (ஒளிர் விளக்கு) ஈரப்பதம் 45-50 % (குளிர் / ஈர விளக்கு) இருக்குமாறு 50 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும்.

emu_incubator
செயற்கை முறையில் அடைகாக்கப்படும் முட்டைகள்

நாளொன்றுக்கு 3 முறை முட்டையைத் திருப்பி விடுதல் வேண்டும். இதை நாமாகவோ அல்லது அடைக்காப்பானின் தானியக்கித் திருப்பி மூலமாகவோ செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கரு ஓரிடத்தில் தங்கி ஓட்டுடன் ஒட்டிக் கொள்வதைத் தடுக்கலாம்.

50வது நாள் முட்டைகள் சுத்தமான தனித்த குஞ்சு பொரிக்கும் தளத்திற்கு மாற்றப்படுகின்றன. அங்கு 35 டிகிரி செ  வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பின்பற்றப்படுகிறது.

இந்த ஈரப்பதம் உள்ளே உள்ள சவ்வு ஈரமடைந்து முட்டையின் ஓட்டை இளக்குவதால் முட்டை பொரிப்பதற்கு ஏதுவாகிறது. இந்த சமயத்தில் முட்டையைத் திருப்பி வைக்கக்கூடாது.

ஈமு முட்டைகளும் பிற பறவைகளின் முட்டைகளைப் போல் பாக்டீரியத் தொற்றால் பாதிக்கப்படும். எனவே தகுந்த தொற்று நீக்கும் புகையூட்டிகளைப் பயன்படுத்தி முட்டைகளை சேகரித்த உடனே சுத்தம் செய்யவேண்டும். காலியான உள்ள அடைகாப்பான், பொரிப்பகம் போன்றவைகளயும் அந்த புகையூட்டி மூலம் தொற்று நீக்கம் செய்யலாம்.

செயற்கை முறை அடைகாப்பான்கள் இதற்காகவே தயாரிக்கப்பட்டவை. கீழ்க்கண்ட தவறுகளால் மட்டுமே அதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. அவை

  • முட்டைகள் சரியாக சேகரிக்கப்படாமலோ, தொற்று நீக்கம் செய்யப்படாமலோ குளிர் வெப்பநிலையில் வைக்கப்படாமலோ இருந்தால்
  • வெப்பநிலை மற்றும ஈரப்பதம் சரியான அளவு பயன்படுத்தப்படாவிடின்
  • அடைகாப்பான், குஞ்சு பொரிப்கம் சரியாகச் சுத்தம் செய்யப்படாவிடின்

முட்டையானது உயிருள்ள ஒரு பொருள் அது தூய புதிய ஆக்ஸிஜனை அதன் ஓட்டின் வழியே எடுத்துக் கொண்டு கார்பன் மோனாக்ஸைடு வாயுவை வெளியேற்றுகிறது. எனவே தினமும்  தவறாமல் போதுமான அளவு தூய காற்று அடைகாப்பானுள்ளும், குஞ்சு பொரிப்பகத்திற்குள்ளும் காற்று செலுத்தப்படவேண்டும். இதற்கு அடிக்கடி அதனைத் திறந்து மூலமாகவோ, செயற்கைக் காற்றோட்ட விசிறியைப் பொருத்துவதன் மூலமோ காற்று கிடைக்கச் செய்யலாம்.

This entry was posted in இனப்பெருக்கம். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*