நுண்ணுயிரி வெள்ளைக் கழிச்சல் (சால்மோனெல்லோசிஸ்)

இந்நோய் சால்மோனெல்லா என்னும் பாக்டீரிய வகையினால் பரவுகிறது.
அறிகுறிகள்

  • இந்த நோய் முதிர்ந்த பறவைகளிலும் ஏற்பட்டாலும் குஞ்சுகளைப் போல் இவற்றில் பாதிப்பு அதிகமில்லை. முட்டைகளையும் இந்நோய் தாக்குகிறது.
  • இந்நோயில் இறப்பு விகிதம் அதிகம். குஞ்சு பொரித்த 2-3 நாட்களில்  பாதிக்கப்பட்ட குஞ்சுகள் இறக்க ஆரம்பிக்கும். இது 3 வாரங்கள் வரை தொடரும். பாதிக்கப்பட்ட குஞ்சுகள் சோர்ந்து, தலையைத் தொங்கவிட்டபடி எங்கும் செல்லாமல் ஓரிடத்திலேயே நீண்ட நேரம் அமர்ந்திருக்கும். அவை தீவனம் உண்ணாது. ஆனால் நீர் அதிக அளவு அருந்தும். நீர்ம நிலையில் வயிற்றுப் போக்கு இருக்கும். கண் குருடாதல் / பாதிக்கப்படுதல், மூட்டில் பிரச்சனைகள், பக்கவாதம் போன்ற அறிகுறிகளும் காணப்படும். மேலும் பாராடைபாய்டு காய்ச்சல் ஏற்படுவதும் உண்டு.
  • இறந்த கோழிகளை சோதனைச் சாவடிக்கு அனுப்பி இந்த பாக்டீரிய நோய்த் தாக்கத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
This entry was posted in நோய் மேலாண்மை. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*