ஆஸ்பர்ஜில்லோசஸ் நோய் தடுப்பு முறைகள்

ஆஸ்பர்ஜில்லோசஸ் நோய் வந்த பின்பு குணப்படுத்த இயலாது. ஆகையால் வருமுன் காப்பது சிறந்தது. அதற்கு 3 முக்கிய முறைகள் பின்பற்றப்படவேண்டும். அவை

பூஞ்சை / காளான் வளர்தளத்தை நீக்குதல்

ஈரமான, பூஞ்சை படர்ந்த வைக்கோல், கூளங்கள் மரத்துகள்கள் போன்ற பொருட்களை அடிக்கூளமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதே போல் கெட்டுப் போன, தீவனங்களையோ அசுத்தமடைந்த நீரையோ பறவைகளுக்கு கொடுக்கக்கூடாது.

அடை காக்கும் இடத்தில் தூசுகளை நீக்குதல்

அடைகாக்கும் இடம் இளஞ்குஞ்சுகளின் கொட்டகைக்கு அருகில் இருப்பதால் அங்கு எந்தவிதத் தூசிகளுமின்றிப் பராமரித்தல் அவசியம்.கீழே கிடக்கும் கூளங்களை எடுப்பதாலோ, நீக்கும் போதோ நிறையத் தூசிகள் மேலெம்புகின்றன. எனவே கூளங்களை சற்று அழுத்திப் போடுதல் நல்லதாகும்.

நல்ல கூளங்களைப் பயன்படுத்துவதும் பலன் தரும். பைன் மரத்துகள் செதில்கள் போன்றவற்றைக் கூளமாக உபயோகிக்கலாம். மிகவும் தூளாக உள்ள கூளங்கள் எளிதில் தூசியாக மாறிவிடுவதால் பிரச்சனை ஏற்படுத்தும்.

சுகாதாரம்

அடைகாக்கும் போதிலிருந்தே முறையான சுகாதார நடவடிக்கைகள் எடுப்பதும் இந்நோய்ப் பரவரைத் தடுக்க உதவும்.முட்டைகள் சரியான தொற்று நீக்கிக் கொண்டு முட்டைகள் கழுவியோ, புகையூட்டியோ சுத்தப்படுத்தலாம். அதே போல் அடைகாப்பான் குஞ்சு பொரிப்பகம் போன்றவையும் சுத்தப்படுத்தப்படவேண்டும்.

குளுட்டரால்டிஹைடு, ஏன்டெக் விக்ரான் எஸ் மற்றும் ஏன்டெக் ஃபார்ம் ஃபுளூயிட் எஸ் போன்ற தொற்று நீக்கிகளைப் பயன்படுத்தி இனப்பெருக்கப் பருவத்திற்கு சற்ற முன்னரே கொட்டில்களையும் தூய்மை செய்து விடுதல் நல்லது.

This entry was posted in நோய் மேலாண்மை. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*