ஈமு பறவைகளைப் பிடித்துக் கையாள்வதற்கு முறையான பயிற்சி தேவை. இல்லையெனில் பறவைக்கோ அல்லது கையாள்பவருக்கோ காயங்கள் ஏற்படும். முதல் இரண்டு மாத வயதுடைய 8 கிலோ எடைக் கொண்ட குஞ்சுகள் சிறியனவாக இருந்தாலும் அவற்றின் கால்கள் வலுவானவை. எனவே அதைப் பிடிப்பவர் காலில் பூட்ஸ், ஜீன்ஸ் போன்ற முறையான கவசங்களுடன் நெருங்குதல் வேண்டும். 7 மாதங்களில் இப்பறவை 2 மீ உயரமும் 18 கிலோ எடையும் கொண்டிருக்கும். எனவே இவ்வயதிலும் 45+ கிலோ எடைக் கொண்ட பறவைகளைக் கையாளும் போது மிகுந்த கவனம் தேவை.
அதற்கு
-
- ஈமு பறவை வளர்ப்பாளரிடம் சென்று அதைக் கையாளும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
- அவருடன் கூடவே இருந்து சற்று பயிற்சி பெற்று வருதல் நலம்.
ஈமுக்கள் கொட்டிலில் வளர்க்கப்படும்போது அதிக வெயிலினால் கன அழுத்தத்திற்கு உட்பட நேரிடலாம். எனவே முடிந்தவரை குளிர்ந்த இரவு நேரங்களிலேயே இவற்றைப் பிடிக்கவேண்டும். அடிக்கடி துரத்திப் பிடித்தல் கூடாது. சரியாகத் திட்டமிட்டுப் பிடிக்கவேண்டும். ஈமுக்கள் அமைதியற்றுக் காணப்பட்டால் சிறிது ஓய்வு கொடுத்துப் பின் மறுநாள் பிடித்தல் வேண்டும்.
ஈமு பறவைகள் சாதுவானவை. எனினும் அவற்றை கால்நடைகளைப் போல கையாள்வது எளிதல்ல. அதிலும் சற்று வயது முதிர்ந்த பறவைகளை கையாளுதல் மிகவும் கடினம்.
ஈமு பறவைகளைப் பழக்கப்படுத்தி அவற்றுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். இவற்றக்கு மனிதத் தொடர்புகள் குறைவு. எனவே அவற்றுடன் அதிக நேரம் செலவிட்டு முறையாகக் கையாண்டால் இவற்றை வளர்ப்பது மிகவும் எளிதே.
i want information about emu farming and culturing