இயற்கை முறை அடைகாப்பு

இயற்கை முறையில் பெட்டைக் கோழிகள் முட்டையிட ஆரம்பித்த பிறகு ஆண் கோழிகள் முட்டை மீதமர்ந்து அடைகாக்கின்றன. முட்டைகள் கொட்டகை முழுவதும் ஆங்காங்கு இடப்பட்டு இறுதியில் முட்டையிடும் காலம் முடிந்த பிறகு, கூடு போன்ற அமைப்பு தயாரிக்கப்பட்டு அதில் அடைகாக்கப்படுகிறது. சிதறிக் கிடக்கும் முட்டைகளை புற்கள், இலைகள், குச்சிகள் மூலம் ஆண் கோழ எதிரிகளின் பார்வையிலிருந்து மறைத்துக் கூட்டிற்கு எடுத்து வந்து அடை காக்கும்.

Emu_natural incubation
அடைகாக்கும் கோழி

ஈமு பறவைகளில் ஒரு முட்டைக்குப் பின் அதிக நாள் இடைவெளி விட்டு மெதுவாகவே முட்டையிடுகின்றன. இரண்டு நாளுக்கு ஒரு முறை முட்டை அதிகமாக இடும். 6-10 முட்டைகள் வரை இட்டபின் ஆண் கோழிகள் அதன் மீதமர்ந்து அடைகாக்க ஆரம்பிக்கும். பின்பு இடப்படும் முட்டைகளையும் உருட்டி வந்து இந்த அடைகாக்கும் முட்டைகளோடு சேர்த்துவிடும். அனைத்து முட்டைகளையும் சேர்த்த பிறகு, ஆண் கோழி எங்கும் செல்லாமல், நீர், தீவனம் எதுவுமின்றி நீண்ட நேரம் முட்டை மீதே அமர்ந்து இருக்கும். மற்ற பறவைகளை கொட்டிலை விட்டு நீக்கி விடுதல் அவைகள் ஒன்றொடொன்று சண்டையிட்டுக் கொள்வதைத் தடுக்கும். முட்டை பாதுகாப்பாகவும் இருக்கும்.

ஆண் கோழி அடைகாக்க ஆரம்பித்த 56வது நாளில் குஞ்சுகள் பொரிக்கும். எனினும் 50ம் நாளிலிருந்தே ஏதேனும் குஞ்சுகள் பொரித்திருக்கிறதா என்று தினமும் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சரிபார்க்கும் போது ஆண் கோழிய மெதுவாக சிறிது உயர்த்தி முட்டைகளின் நிலையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

குஞ்சுகளை குஞ்சு வளர்ப்பகத்தில் வளர்ப்பதாக இருந்தால் குஞ்சுகள் பொரித்தவுடன் அவற்றை வளர்ப்பதற்திற்கு எடுத்துச் சென்று விடவேண்டும் அல்லது ஆண் கோழியுடன் சேர்த்து விட்டு விடுவதாலக இருந்தால் பொரிக்காத முட்டைகளை அகற்றவிடவேண்டும். குஞ்சுகள் சிறிது வளரும் வஐர வளர்ப்பகத்தில் வைத்து கழுகு, காகம், நரி போன்றவற்றிடமிருந்து பாதுகாப்பாக வளர்ப்பதே சிறந்தது.

இயற்கை முறை குஞ்சு பொரிப்பில் அதிக அளவு இடம் தேவைப்படுகிறது. மேலும் இவ்வாறு செய்வதற்கு முன் இதைப்பற்றி போதிய விவரங்களை வளர்ப்பாளர் அறிந்திருக்கவேண்டும்.

மேலும் இயற்கை முறையில் ஈரமான சூழ்நிலைகளில் பாக்டீரிய தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதோடு ஆரம்பத்தில் இடப்பட்ட முட்டைகள் நான்கைந்து வாரங்கள் வெப்பநிலை மாற்றத்திற்கு உட்பட்டு இரவின் குளிர்ந்த வெப்பநிலையால் கரு இறந்து விட நேரிடலாம். இது போன்ற காரணங்களால் இயற்கை முறையில் குறிப்பிட்ட அளவு இழப்பு ஏற்படும்.

This entry was posted in இனப்பெருக்கம். Bookmark the permalink.

2 Responses to இயற்கை முறை அடைகாப்பு

  1. SUDHEER says:

    ஈமு கோழி வளர்ப்பில் ஆர்வம்

  2. Ramkumar.N says:

    i need about emu chickens features

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*