ஈமுக்களைப் பிடிக்கும் முறைகள்

பெரிய ஈமுக்களைப் பிடிக்கும் பொது அவற்றின் பின்னால் அல்லது பக்கங்களிலிருந்தே பிடிக்கவேண்டும். ஏனெனில் இப்பறவைகள் முன்பக்கம் நோக்கியே உதைக்கக் கூடியவை. மேலும் பிடிக்கும் போது இறக்கைகளை சேர்த்து நெருக்கமாக இறுக்கிப் பிடித்துக் கொள்ளுதல் வேண்டும். ஈமுவின் பின்னங்கால்களில் கூர்மையான அமைப்புகள் இருப்பதால் அவை காயமேற்படுத்தி விடாமல் கையாள்பவர் கவனமாக இருக்கவேண்டும். பிடித்திருக்கும்போது ஈமுக்கள் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளப் போராடும் போது காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

emu catching
பின் பக்கமாக வந்து பிடித்தல்
வேறொரு முறையில் ஈமு பறவையின் பின்பக்கமாக வந்து ஒரு கையை பறவையின் பின்பகுதியில் அழுத்திக் கொண்டு மற்றொரு கையால் அதன் நெஞ்சுத் துட்டில் உள்ள மென்மையான தோலை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும்.  அதன் பின்பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தத்தினால் ஈமுவால் நகரமுடியாமல் அடங்கிவிடும்.

முதலில் பிடிக்கும் போது ஈமு அதிகமாகத் துள்ளும். ஒரு நபர் அதைப் பிடித்தவுடன் மற்றொரு நபர் உடனே அதை வாங்கி கூண்டில் / அறையில் அடைத்து விடவேண்டும். பிடிபட்ட ஓரிரு நிமிடங்களில் ஈமு அடங்கிவிடவேண்டும். அது துள்ள ஆரம்பித்தால் பின்பு அதைப் பிடித்துக் கொண்டு இருப்பது கடினம்.

பிடித்தபின் பிடி தளர்ந்தாலோ, விலகிவிட்டாலோ, உடனே பறவையைக் கீழே விட்டு விட்டு ஓடிவிடவேண்டும்.
பிடிபட்ட பிறகு தொடர்ந்து பறவையானது அடங்காமல் துள்ளிக்கொண்டே இருந்தால், அதன் மேல்கழுத்தையும், பின் தலையையும் பிடித்து மேலும் கீழும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசையில் இழுக்கவேண்டும். இது பறவையை ஓரளவு பலத்தைக் குறைத்து அது முன்னோக்கி உதைப்பதைக் குறைக்கும்.

கைக்கடிகாரம்  போன்ற பொருட்களை கழற்நி விடுதல் நலம். ஈமு பறவைகளை முறையாகக் கையாண்டால் நல்ல முறையில் வளர்க்கலாம்.

உணவு மற்றும் நீர் தேவை

emu_feeding
தீவன ஊட்டம்

emu_watering
நீர்த் தொட்டி
10 பறவைகளுக்கு 1 நீர்த்தொட்டி மற்றும் 2 தீவனத்தொட்டி பயன்படுத்தப்படவேண்டும். குடிநீருக்கு 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரும்பு வாளிகள் உபயோகிக்கலாம். நீர் சுத்தமானதாகவும், பாக்டீரியாக்கள் அற்றதாக இருக்கவேண்டும். நீரை முன்பே அதன் தன்மையை சோதித்து பொட்டாசியம் பர்மாங்கனேட் போன்ற தீவன ஊக்கிகள் பயன்படுத்துதல் நன்று. நீரின் கலங்கல் தன்மையை நீக்க ஆலம் பயன்படுத்தலாம். ஒரு வளர்ந்த ஈமுவிற்கு 6-7 லிட்டர் தண்ணீர்  நாளொன்றுக்குத் தேவைப்படுகிறது. நீர்த்தொட்டிகள் இரவிலும் கூட நீர்த் தேவைப்படும் அளவு தூய்மையாக இருக்குமாறு பராமரிக்கவேண்டும். தீவனமானது காலை 7.00 மணியிலிருந்து 11.30 மணி வரையிலும் பிற்பகல் 3லிருந்து மாலை 6.30 மயி வரையிலும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கொடுத்தல் வேண்டும். காய்கள், இலை தழைகள் போன்றவற்றையும் நன்கு நறுக்கிக் கொடுக்கலாம்.

நாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான தீவன அளவு

ஈமுக்கோழியின் வயது (மாதங்களில்) நாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான அளவு (கிராமில்)
3 200
4 300
5 350
6 400
7 500
8 600
9 700
10 800
11 800
12 900
13 900
14 900
15 900
16 900
17 900
18 900

தீவனத்துடன் கொடுக்கும் உபபொருட்கள்

கால்சியம்
நீர்ம வடிவில் இருக்கும் கால்சியத்தைக் குடிதண்ணீரில் கலந்து கொடுத்தல் வேண்டும். கீழ்க்கண்ட மருந்துகள் சந்தையில் எளிதில் கிடைப்பவை. இப்பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பறவையின் வயதிற்கேற்ற அளவில் அளிக்கலாம்.

வயது பறவை ஒன்றுக்குத் தேவையான அளவு (மி.லிட்டரில்)
3-5 மாதங்கள் 1.0
5-8 மாதங்கள் 2.0
8 மாதங்களுக்கு மேல் 3.0

வைட்டமின் ஏ, டி3
நீர்மநிலையில் கீழ்க்கண்ட விட்டமின்களை குடிநீரில் கலந்து கொடுக்கலாம். அளவுகள் வயதிற்கேற்ப அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வயது
நாளொன்றுக்கு  ஒரு பறவைக்குத் தேவையான அளவு (மி.லி)
3-9 மாதங்கள் 0.5
9 மாதங்களுக்கு  மேல் 1.0

விட்டமின் பி காம்ப்ளக்ஸ்
குரோவிபிளக்ஸ் பி பிளக்ஸ் போன்ற விட்டமின் காம்பளக்ஸ்களை நீரில் கலந்து அளிக்கவேண்டும்.

வயது
நாளொன்றுக்கு  ஒரு பறவைக்குத் தேவையான அளவு (மி.லி)
3-5 மாதங்கள் 1.0
5-8 மாதங்கள் 2.0
8 மாதங்களுக்கு மேல் 3.0

ஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை

ஊட்டச்சத்துக்கள்
ஆரம்பத்தில் வளரும் பருவத்தில் இறுதியில்
கிரகிக்கப்பட்ட ஆற்றல் / கிலோ கலோரி / கிகி 2685 2640 2860
பண்படா புரதம் % 22 20 17
மெத்தியோனைன் % 0.48 0.44 0.38
லைசின் % 1.10 0.94 0.78
பண்படா நார்ப்பொருள் 6-8 6-8 6-7
கால்சியம் 1.5 1.3 1.2